பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 மக்களும் கீழான மாக்களும் எம்மால் அறிந்த வரையில் அப்படிப்பட்டவர் களைக் கண்டதே இல்லை என்று ஆசிரியர் வள்ளுவனார் வெளிப்படையாகவே கூறுவதற்கு கினைப்பாரேயானால் கயவர்களின் இழிநிலை-கன்கு புரிந்து கொள்ள வேண்டியதாகும். தோற்றத்தால் முழுவதும் மக்களையே ஒத்திருப்பவர்கள் கயவர்கள் ஆவார்கள். - அவர்களை ஒப்பானவர்களை யாம் கண்டதில்லை.” என்ற கருத்தினை மிகத் தெளிவாகக் குறட்பா ஒன்று கூறுகின்றது. மக்களே போல்வர் கயவர் அவரன்ன -ஒப்பாரி யாம் கண்டதில்'. இக்குறட்பாவில், அவரன்ன ஒப்பாரி என்ற தொடர் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய தொன்றாகும். # உலகில் மிகவும் அளவு கடந்து இருக்கின்ற மக்கள் கூட்டத்தில் கயவர்களை ஒப்பவர்கள் யாருமே இருக்க முடியாது என்று குறிப்பிட்டுப் பேசுகின்ற கருத்தினை இக்குறட்பா வலியுறுத்துகின்றது. - ஆகையினால் மக்களையும் மக்கள் போன்றவர் களையும் வெவ்வேறாகப் பார்த்தல் வேண்டும். மனத்தின் தன்மையினைக் கொண்டே மக்களை அளந்து பார்த்தல் வேண்டும். மனித உணர்ச்சி இல்லாதவர்கள் மக்கள் கூட்டத்தில் சேர்க்கப்பட மாட்டார்கள். o - - - - மன உணர்ச்சியின் தன்மையினை மக்களுக்கு உரிய சிறப்பான முறையில் பெற்றிருத்தல் வேண்டும்.