பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 உண்ணுவதும் உடுப்பதும் இவை போன்றவைகளெல் லாம் மக்களுக்குப் பொதுவாக இருக்க முடியும். உண்ணுவதைக் கொண்டும் உடுத்திக் கொள்வதைக் கொண்டும் இவை போன்ற மற்ற செயல்களைக் கொண்டும் ஒருவனை மக்கள் கூட்டத்தில் வைத்துக் கணக்கிட்டுவிட முடியாது. - - - மக்களுக்கென்றே இருக்க வேண்டிய சிறப்பான குணம் இருந்தாக வேண்டும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் காணம்’ என்பது மக்களுக்கேயுரிய உயர்ந்த பண்பாகும். அதாவது இழிவான தொழில்கள் செய்வதற்கு, பழிபாவச் செயல்கள் செய்வதற்கு அஞ்சு கின்ற பண்பாகும். அப்பண்பே ஆண்மைக்கு அடையாளமாகும். இதுவே மாந்தர் சிறப்பு இந்த நாணம் என்கிற குணம் இல்லாத மக்கள் மக்களாகக் கருதப்பட மாட்டார்கள். எல்லா மக்க ளுக்கும் உறக்கம், அச்சம், ஆசை, உண்ணுதல், உடுத்துதல் என்பவைகளெல்லாம் பொதுவாகத்தான் இருக்கச் செய்கின்றன. அப்படி யிருந்தாலும் மன. உணர்ச்சியால் ஏற்படக் கூடிய மனிதப் பண்பாடுகள் இல்லையென்றால் மக்கள்ாகக் கூறிக்கொள்ள உரிமை இல்லை. - காணுடைமை மாந்தர் சிறப்பு என்று ஒரு குறட்பா முடிகின்றது. சிறப்பான பண்புகளில் ஒன்றாக அ ைம க் க ப் ப ட் டு காணம்’ பேசப்படுகின்றது. அப்பண்பாடு மாந்தருக்கு இல்லையென்றால்