பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 மடைதலும் உண்டாகிவிடும். ஆ கை யி ன ல் உரைத்துப் பார்த்தல் என்பதுதான் பொருத்தமான வழியாகும். - இக்கருத்தினை ஆசிரியர் வள்ளுவனார் கூறி விளக்குகின்றார் என்றால் ஆழ்ந்து சிந்திக்கத்தக்க உண்மையினை காம் அறிந்து விடுதல் வேண்டுமென்ப தாகும். ஒருவருக்குப் பெருமையினையோ அல்லது சிறுமையினையோ கொடுக்க வேண்டுமென்றால் அதற்குக் கட்டளைக்கல் போல் இருப்பது அவரவர் செய்கின்ற செயலேயாகும். நற்செயல்கள் புரிக பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்கருமமே கட்டளைக் கல் இக் குறட்பா மிகத் தெளிவாக நல்லதோர் உண்மையினை உரைக்கின்றது. உரைகல் இல்லையென்றால் பொன்னின் தன்மை யினை அறிவதற்கு வேறு வழியில்லை என்று கூறுதல் மிகையாகாது. அதுவே போல ஒருவருடைய செயல் களை நாம் அறிகின்ற வாய்ப்பு கமக்கு இல்லை யென்றால் அவர்களுக்குப் பெருமையினையோ அல்லது சிறுமையினையோ காம் கணக்கிட்டுக் கொடுத்தல் முடியாததாகும். உலகில் வாழும் மக்கள் ஒழுக்கமும் பண்பாடும் நிறைந்தவர்களாக இருத்தல் வேண்டும் என்கின்ற உண்மைக்கு இக்குறட்பா வழிவகுத்துக் காட்டு: கின்றது. ஒருவரைத் தெரிந்து தெளிந்து அறிதல் வேண்டும் என்பதற்கு இதுதான் முறையானதாகும். கருமமும் கட்டளைக் கல்லும் ஒன்றுசேர எண்ணப்பட வேண்டிய கருத்தினைப் புலப்படுத்துகின்றன. -