பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 கட்டளைக்கல் குணத்தினையும் குற்றத்தினையும் எடுத்துக் காட்டும் - நல்லது அல்லது கெட்டது, உயர்ந்தது அல்லது தாழ்ந்தது என்கின்ற தன்மைகள் அனைத்தையும் கட்டளைக்கல் காட்டி விடுகின்றது. அதுவே போன்று செய்கின்ற செயல்களும் பெருமை சிறுமை ஆகிய இரண்டினையும் காட்டிவிடும். கருமம் செய்வதை முதன்மையாகக் கொண்டு மக்கள் வாழ்க்கையினை அளந்து பார்க்கின்ற முறைமை கூறப்படுதலால் இவ்வுலக வாழ்வும் செயலாற்றும் தன்மையினால்தான் அமைக்கப்படுகிறது என்பது அறியப்படுகின்றது. செயல் புரியாத மக்கள் முன்னேற்றம் காணுதல் இயலாது. செயல் கிறைந்த நாடு முன்னேற்றம் காணும். ஆகவே எல்லாவற்றிற்கும் செய்தொழிலே முதன்மையானதாக வைத்துக் கருதப்படுதல் வேண்டும் , என்கின்ற விரிவான கருத்து குறட்பாவினுள் அமைந்து கிடக்கக் காணுகின்றோம். பொன்னான அரிய குணமே நாணம் நாணம் என்கின்ற குணம் மக்கட் பிறவிக்குச் சிறப்பாக அமைந்துள்ள பண்பாகும். ஆண் பெண் இருபாலாருக்கும் நாணம் என்பது பொதுவாக இருக்க வேண்டிய பண்பாகும். நாணம் என்கின்ற குணம் பெண்களுக்கு மட்டுமே இருத்தல் வேண்டுமென்றும் ஆண்களுக்கு இருக்கத் தேவையில்லை என்றும். கூறுவோரும் உண்டு. - -