பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் கோட்டம் , 107 ைகவியரசர் முடியரசன் நற்ற னே கடும் நடுவரங்கதனின் பாங்கர்க் கற்றவர் அதங்கோட் டாசான் காப்பியர் உருவம் உண்டு; சொற்றிடும் குறளிற் கறும் சொற்பொருள் உணர்த்தும் சிற்பம் பெற்றிடுந் திருத்தேர் ஒன்று பெருமிதத் தோடு நிற்கும். மூன்றுபால் உணர்த்தும் பாட்டை மூவண்ணக் கற்கள் கொண்டு தோன்றவே பொறித்து நூலின் தோற்றம்போல் விரித்து வைத்தே ஆன்றதோ விருப்பால் காண அணுகிடும் மாந்தர் தம்மைக் கன்தவிர் மனத்தர் ஆக்கும் குறள்மணி மாடம் உண்டு. உலகெலாம் உணர்ந்த எங்கள் ஒப்பிலான் வடிவந் தாங்கும் கலையுலாம் திருத்தேர் அங்கே காணலாம் கண்டு வந்தால் உலவலாம் இன்ப வானில் உளமெலாம் படிந்த தீமை விலகலாம் குறள்வி தைத்தால் விளையலாம் துாய வாழ்வு.