பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“எனக்குப்பின் ... *திராவிட நாட்டின் கவிஞன் வானம்பாடி முடியரசன்' கவிஞர் -பாவேந்தர் முடியரசன்' பாரதிதாசன் -பேரறிஞர்

பேரால் முடியரசன் பேரிடர்கள் உற்றாலும் பேரா முடியரசன் பெற்றுவந்தேன் கொற்றத்தை; நாட்டரசன் நானல்லேன் என்றாலும் நான்குவகைப் பாட்டரசர் என்னும் பரம்பரையில் வந்தவன்யான்: வள்ளுவனார் சொல்லி வைத்த வாழ்வுக் குறள்நெறியில் எள்ளளவுங் கோடா தொழுகிவருங் கொற்றவன்யான்; பாட்டால் உலகாளும் பாவலர்தம் நெஞ்சத்து வீட்டில் கொலுவிருக்கும் வெற்றித் திருமகளைப் பொங்கிவரு மன்பால் புகழ்ந்தேத்தும் என்தலையில் தங்கமுடி பூண்டு, தனியாட்சி செய்பவன்யான்: தாங்குங் கவிமுடிதான் சான்றோர் மரபுணர்ந்து பாங்கோ டணிசேரப் பண்ணி முடித்தமுடி, ஒட்டார்பின் செல்லா உரமென்னும் வைரத்தைப் பட்டாங் கறிந்து பதித்தமைத்த நன்முடியாம்: .................................................................. .................................................................. வாள்பிடித்து முன்செல்வேன் வால்பிடித்துப் பின்செல்லேன் கோள்பிடிக்க அஞ்சிடுவேன் கோல்பிடிக்க அஞ்ஆகிலேன்: தாள்பற்றி நின்றறியேன் தக்க கவியெழுதத் தாள்பற்றி நிற்பதுண்டு தன்மான நெஞ்சுண்டு:

-வள்ளுவர் கோட்டத்தில்