பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

13

 கவியரசர் முடியரசன்


வள்ளுவர் கோட்டம் 9 13 ல கவியரசர் முடியரசன் இ Lh ,ெ o; ר ஒ "சாதி மறுப்புத் திருமணம் செய்யவாவது இசைவு கொடுங்கள்" என அன்னையாரிடம் வேண்டுதல், பெற்றோர் இசைதல். பெற்றோர் மூலம் 'கலைச்செல்வி எனும் நலத்தகையாரை பேராசிரியர் மயிலை சிவமுத்து தலைமையில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார் (1949). திருமணமான ஆண்டே தமது துணைவியாருடன் இந்தி எதிர்ப்புப் போரில் பங்கேற்றார் (1949). கலப்புத் திருமணத்தின் தேவையைப் பற்றிக் கவிதை பல பாடியதோடு இருந்து விடாமல் தாமும் கலப்புத் திருமணம் செய்து கொண்டு, தம் பிள்ளைகள் அனைவருக்கும் அவ்வாறே செய்துவித்துத் தம் கொள்கைக்கு வெற்றி தேடித் தந்ததன்மூலம், 'அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்' என்னும் வள்ளுவன் வாக்கைத் தோல்வியுறச் செய்தார். காரைக்குடியில் மீ.க. உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் பணியேற்றார் (1949). 'முடியரசன்...எனக்குப் பின் கவிஞன்”, எனப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனால் பாராட்டப் பெற்றார் (1950). குருதி உமிழும் கொடுநோய்க்கு இலக்காகி, புதுக்கோட்டைத் தமிழ்ப் புரவலர் அண்ணல் பு:அ.சுப்பிரமணியனார் அருட்கொடையால் உயிர் பிழைத்தார் (1955). மூன்றாவது மகவான ஆண் மகன் பிறத்தல். செய்நன்றியின் பொருட்டு, தன்னுயிர் காத்த அண்ணல் சுப்பிரமணியனார் நினைவாக அம்மகனுக்கு 'கப்பிரமணியன் எனப் பெயரிட்டார். (1955). - 'கப்பிரமணியன் என்ற அம்மகன் மறைவு. கவிஞர் பெருந்துயரம் அடைதல் (1959).