பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

36

 கவியரசர் முடியரசன்


வள்ளுவர் கோட்டம் 36 6கவியரசர் முடியரசன்

யாதும் அறியாமல் ஆகுலங்கள் செய்கின்றார்; மாசகற்றி வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கோர் ஆசையுற்று நல்ல அறநெறியில் நிற்கவிலை; மாந்தர் எனைமறந்தார் வாய்மைக் குறள்மறந்தார் போந்த நெறியெல்லாம் போய்ப்புகுந்தார்; இன்னுங்கேள் இம்மைப் பயன்துய்க்க எண்ணும் மனிதருக்குச் செம்மைப் படுத்திச் சீரான நன்னெறிகள் எத்துணையோ சொன்னேன் எனினுமவர் கேட்டிலராய்ப் பித்தரைப்போல் இவ்வுலகில் பேதுற்றலைகின்றார்; பத்துக் குறளால் பகவன் இயல்பனைத்தும் நத்தும் படியுரைத்தேன் நல்ல நெறிவகுத்தேன் எள்ளளவும் அந்நெறியை ஏற்று நடக்காமல் பிள்ளைகள்போல் இன்னும் பிழைபடவே செய்கின்றார்; கல்லாலும் செம்பாலும் காசுமணிப் பொன்னாலும் இல்லா உருவம் இறைவனுக்குத் தந்தார் சிலையாகச் செய்தார் சிறப்பெடுத்துப் போற்றும் கலையாகச் செய்தார் கடவுட்பேர் தந்தார் நிலையாகக் கோவிலுக்குள் நிற்கவைத்தார்; ஆனால் விலையாக ஊர்கடத்தும் வேலையிலும் ஈடுபட்டார்; உள்ளத்தில் ஆண்டவனை ஒர்சிறிதும் எண்ணாமல் கள்ளத் தனமாகக் கடல்கடத்திச் செல்கின்றார்; பாயிரத்தின் முன் சொன்ன பண்பை மறந்துவிட் டாயிரந் தெய்வங்கள் ஆக்கிப் படைத்துத்