பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

55

 கவியரசர் முடியரசன்


வள்ளுவர் கோட்டம் 9 55 ைகவியரசர் முடியரசன் இருளகற்றுங் காலையிளங் கதிரோன் என்ன இருநிலத்து மாந்தருக்கு மனத்து நோயை மருளச்செய் தோட்டுகிற புலவன் றன்னே ജ/ மருத்துவத்துக் கலைஞரென மதித்து நிற்போம்; பொருளெடுத்து நிறைத்திருக்கும் அவன்றன் பாட்டில் புகன்றிடுநல் வழிநிற்போர் பிணிய றுப்பர்; மருளகற்றும் குறளமுதைக் குழுமி நின்று மாநிலத்து மாந்திநலத் துய்த்து வாழ்வோம். அறஞ்சொன்னான் பொருள்சொன்னான் அதனோடன்றி 六 ஆருயிர்கள் தளிர்ப்பதற்குக் காமஞ் சொல்லி அறம்பிறழா அகத்துறையும் சொல்லி வைத்தான் அத்துறையில் வள்ளுவன்றன் வித்த கத்தின் திறங்கண்டு துய்ப்பதற்குப் புலமை வேண்டும்; திதில்லா நெறிமுறையிற் காமஞ் சொன்னான் உரங்கொண்ட பேரறிஞன் காதற் பாடல் ஒவ்வொன்றுந் தேனடையாய் இனிக்கக் காண்போம். காமமெனுஞ் சொல்லொலியைக் கேட்டு நெஞ்சங் கலங்கியிது கொடுநெறியாம், வேண்டா என்று பாமரரை ஏய்ப்பவரும் பாரில் உண்டு பாலுணர்வும் நூலுணர்வும் அறியார் பாவம்! தேமதுரத் தமிழ்க்குறளில் காணுங் காமம் தித்திக்குந் தேன்பாகோ செங்க ரும்போ யாமறியோம் உவமைசொல, உவமை யாக யாதுரைத்தும் பயனில்லை காமம் விஞ்சும்.