பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

94

 கவியரசர் முடியரசன்


வள்ளுவர் கோட்டம் 9 94 e கவியரசர் முடியரசன் திருக்குறளின் வழியிங்குத் திறந்திருந்தும் திரைப்படத்தின் வழியன்றோ நாடு கின்றார்; உருப்படுமா அவரெண்ணம்? நாட்டில் நன்மை உயர்ந்துவரச் சரிப்படுமா?போன போக்கில் மருட்கொளிபோல் பொறுப்புடையார் நடந்து சென்றால் மதியுடையார் நகைக்காமல் யாது செய்வர்? நெருக்கடியில் கலைந்து விடும் சாயப் பூச்சை நினைந்துசெலின் நாடன்றோ பாழில் விழும்! கலகத்தை விட்டொழிக்க மக்கட் பண்பு கனிந்துருலம் செழித்திருக்க பொய்ம்மை யாவும் கலகலத்துப் போயொழிய, உள்ள மெல்லாம் கடல்போல விரிந்திருக்கப், பகைமை நீங்கி உலகத்தில் ஒற்றுமைகள் நிலைத் திருக்க உள்ளுவரேல் வள்ளுவரே துணையாய் நிற்பர்: இலவடுத்த கிளிபோல எதையோ நம்பி ஏமாந்து திரிகின்றார் பேதை மாந்தர் பெட்டகத்தே பெருநிதியம் நிறைந்தி ருந்தும் பேழையினைத் திறந்துணர மாட்டா திங்குத் தட்டெடுத்துத் திரிகின்றார்; தமது செல்வம் தரையகத்துப் புதையலெனக் கிடந்தும் தோண்டி தொட்டெடுத்துத் தாம்நுகர்ந்து, பிறருக்கிந்து தோளுயர்த்தி வாழாமல் மற்றோர் பின்னே கெட்டலைந்து திரிகின்றார்; இனிமேல் அந்தக் கீழ்மையெலாம் போயொழியும் குறள் உணர்ந்தால்