பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

舒 வள்ளுவர் சொல்லமுகம் கடவுள் வாழ்த்தை அடுத்து வான்சிறப்பை வலி யுறுத்தினர். மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை’ என்பர் அறிஞர். மழை பொழிவதேைலயே உலகம் வாழ்கிறது. உயிர்கள் தழைக்கின்றன. ஆதலின் மழையே மாநிலத்தார்க்கு அமிழ்தம் என்று போற்றும் மாண்புடையது. மழைத்துளி வீழாதாயின் பாரில் பசும்புல்லின் தலையையும் பார்த்தல் இயலாது. நெடுங் கடலும் தன் நீர்வளம் குன்றிவிடும். உழவர் நிலத்தை உழுது பயிர் செய்தலே ஒழிவர். பரந்த உலகத்தைப் பசித்துயரம் பற்றிக்கொள்ளும். தெய்வங்கட்கு விழ வும் வழிபாடும் கடவாது ஒழியும். தானமும் தவமும் தாரணியில் நடவா. அவனருளாலே அவன் தாள் வணங்கி என்னும் மணிமொழி எவ்வளவு உண்மை யானது ! 'மழையும் தவமிலார் இல்வழி இல்லை என்பர் கல் லறிஞர். கல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும்மழை என்பார் தமிழ் மூதாட்டி யார். இறைவன் திருவருளேப் பெறுதற்கென்றே அரிதின் முயன்று பெருந்தவம் கிடப்பார் முனிவர் பெருமக்கள். அவர்களையே நம் தெய்வப்புலவர், நீத் தார் என்ற பெயரால் குறித்தருளினர். முற்றும் துறந்த முனிவர்பெருமை மொழியவொண்ணுது. பாரனேத்தும் பொய்யெனவே பற்றற்று கின்று, பற் றற்ற பரம்பொருளைப் பற்றிய அன்னர் முற்றுணர்ந்த மூதறிஞர் ஆவர். அவர்கள் செயற்கரிய செயல் புரியும் பெரியர். குணமென்னும் குன்றேறி கின்ற குளிர் தவச் செல்வர். செந்தண்மை பூண்ட அந்தணுளர். உரன் என்னும் தோட்டியால் ஒரைந்தும் காத்த உததமா.