பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறையருளும் சிறைமொழியும் 7 திருவருள் கைவரப்பெற்ற துறவியராகிய அற. வோர் பெருமை அளப்பரியது. உலகில் பிறந்து இறந்த மக்களை எண்ணுதல் கூடுமோ? அதுபோலவே தான் து ற ங் தா ர் பெருமையை அளந்தறிதல் இயலாது. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று' என்பது வள்ளுவர் வாக்கு. இத்தகைய பெருமை வாய்ந்த அருந்தவச் செல் வர் திருவாய்ப் பிறக்கும் மொழிகளே நிறைமொழி யெனவும் மறைமொழியெனவும் போற்றும் ஆற்றல் உடையன. கீத்தாரை நிறைமொழி மாந்தர் என்றே வள்ளுவர் போற்றுவார். அவர்கள் அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் அவ்வப்பயன்களைப் பயந்தே விடும் இயல்புடையன அவர் மொழிகள். அவைகளே மந்திரம் என்று முன்னேர் பொன்னேபோல் போற். றிய மொழிகள். இதனைத் தொன்மைத் தமிழ் இலக் கணம் ஆகிய தொல்காப்பியம் நன்கு வலியுறுத்தும். நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளத்த - மறைமொழி தானே மந்திரம் என்ப’’ என்று தொல்காப்பியர் சொல்லிப் போக்தார். சந்தனப்பொதிகைச் செந்தமிழ் முனிவகிைய அகத்தியன் அறு முனிவர்களுடன் இந்திரப்பேறு பெறுதற்கு விரைந்தேகும் நகுடனது சிவிகையைத் தோளில் சுமந்து சென்ருன். காமவேட்கை மீதுார்ந்த நகுடன், இந்திராணியின் மீது கொண்ட அந்தமிலாக் காதலான், சர்ப்ப சர்ப்ப' என்று சத்தமிட்டான். நகுடனது அறியாமை மிக்க காம மயக்கினைக் கண்ட