பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் சொல்லமுகம் தண்டமிழ் முனிபுங்கவனகிய அகத்தியன், சர்ப்ப மாகக்கடவாய் ! எனக் கோபங்கொண்டு சாபமொழி பகர்ந்தான். காமப் பித்தகிைய ககுடன் கானகத்து உழலும் பாம்பாகிக் கடுந்துயர் உழந்தான். தமிழ் முனிவகிைய அகத்தியன் அகத்தெழுந்த கோபமொழி நிறைமொழியன்ருே ! இறையருள்பெற்ற நிறைமொழியாளராகிய ஞான சம்பந்தர் மதுரைத் திருமடத்தில் தங்கியிருந்தகாலச் சமணர்கள் அங்கே திக்கொளுவினர். அச்செயலுக்கு மூலகாரணமாய் இருந்தவன் மதுரை மன்னன் ஆகிய கூன்.பாண்டியனே என்பதை உணர்ந்த அப்பெரு மான், பையவே சென்று பாண்டியற்காகவே' என்று இயம்பியருளினர். அவரின் மொழிகள் நிறைமொழிக ளாதலின் திருமடத்தில் பற்றிய தீயின் வெம்மை தென்னவன் உடம்பில் வெப்புநோயாகப் பரவியது. சமணருடன் வாதுசெய்யத் திருவுள்ளம் கொண்ட ஞானசம்பந்தர், பாண்டியனது வெப்புநோயை நீக்க முற்பட்டார். ஆலவாய்ப் பெருமான் திருவருளேச் சிங் தித்து, மந்திரமாவது நீறு என்று தொடங்கிச் செங் தமிழ்த் திருப்பதிகம் பாடியருளினர். ஆலவாயான் அருள் கலந்த திருநீற்றை அரசன் உடம்பில் பூசி யருளினர். அவனது வெப்புநோய் அகன்றது. வேங் தனும், ஒங்குக!' என்று வாழ்த்தியருளினர். அப் பெருமானது கிறைமொழியின் ஆற்றலால் மன்னனது உடற்கூனும் மாறியதன்ருே ! - திருமருகல் என்னும் தலத்தே பாம்பு தீண்டி மாண்ட வணிகன் மீண்டும் உயிர்பெற்று எழுமாறு பாடியருளிய ஞானசம்பந்தர் வாக்கு கிறைமொழியாவ