பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறையருளும் சிறைமொழியும் 9. தன்ருே அப்பூதியடிகள் மைந்தன் அங்ங்னமே நச் சரவம் தீண்டி கல்லுயிர் நீத்தகாலை நாவுக்கரசர், அவன் உயிர்பெற்று எழுமாறு பாடியருளிய பாக்கள் இறையருள் கலந்த நிறைமொழிகள் அன்ருே ! திருமறைக்காட்டில் வேதத்தால் அடைக்கப் பெற்ற திருக்கோவில் கதவங்கள் திறக்குமாறு திரு நாவுக்கரசர் பாடிய பாசுரங்களும், மீண்டும் அவை அடைக்குமாறு திருஞானசம்பந்தர் அருளிய பாக் களும் அருள் கலந்த நிறைமொழிகள் அன்ருே ! சுந்தரர் அவிநாசித் திருப்பதியில் முதலை உண்ட பாலனே அழைக்க, முழுமுதற் பெருமானே கினேந்து, 'கரைக்கால் முதலேயைப் பிள்ளை தரச்சொல்லு கால னேயே’ என்று அருளிய திருவாக்கு நிறைமொழி யாவதன்ருே !