பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனேயும் மக்களும் 11 திரு, குணம் ஆகியவற்ருல் ஒப்புடைய ஒருவனும் ஒருத்தியும் கருத்து ஒருமித்து வாழ்வதே இல்வாழ்க்கை எனப்படும். காதல் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவு பட்டதே இன்பவாழ்வு' என்பர் தமிழ்ச் செல்வியார். காதல் மனேயாளும் காதலனும் மாறின்றித் தீதில் ஒரு கருமம் செய்தல் வேண்டும், என்பர் சிவப்பிர் காசர். நம் கண்கள் இரண்டும் ஒன்றையே நோக் கும். ஒன்று ஒரு பொருளேயும் மற்ருென்று இன் ைெரு பொருளேயும் நோக்குவது இல்லை. அது போலவே மனேயறம் பூண்ட மக்கள் இருவரும் ஒன்று பட்ட உள்ளத்தராய் இல்லறத்தை இனிது நடத்த வேண்டும் என்பர். வண்டியில் பூட்டிய காளைகள் இரண்டும் ஒரு நெறி யில் சென்ருலன்றி, வண்டி குறித்த இடத்தைச் சென்று சேராது. அதுபோலவே இல்லறம் என்னும் வான்சகடத்தில் பூட்டிய காளைகளாகிய கணவனும் மனைவியும் கருத்தால் ஒன்றுபட்டுச் சென்ருலன்றி அவர் மேற்கொண்ட அறம் நடவாது வீடுபேருகிய பயன் விளேயாது. இக் கருத்தை முனைப்பாடியார் என்னும் தமிழ்ப்புலவர் தமது அறநெறிச்சாரம் என் லும் அரிய நீதி நூலுள், மருவிய காதல் மனையாளும் தானும் இருவரும் பூண்டுய்ப்பின் அல்லால்-ஒருவரால் இல்வாழ்க்கை என்னும் இயல்புடைய வான்சகடம் செல்லாது தெற்றிற்று நின்று ” என்ற பாட்டால் இனிது விளக்கினர். காக்கைக்குக் கண்கள் இரண்டாயினும் ஒளியைத் தரும் கருவிழி ஒன்றே. எப்பக்கம் நோக்கவேண்டுமோ