பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 வள்ளுவர் சொல்லமுதம் அப்பக்கமாகக் கருவிழியைச் சாய்த்தே காக்கை ஒரு பொருளை நோக்கும் இயல்புடையது. அதுபோலத் தலைவன் தலைவியாகிய இருவர்க்கும் உடம்பு இரண்டா யினும் உயிர் ஒன்றே. வாழ்வில் வரும் இன்பதுன் பங்கள் எல்லாம் அத் தலேவற்கும் தலைவிக்கும் ஒன்று போலவே வரும் என்று மாணிக்கவாசகர், காதலர் வாழ்வைச் சித்திரிப்பார். " காகத்(து) இருகண்ணிற்(கு) ஒன்றே மணிகலந்(து) ஆங்கிருவர் ஆகத்துள் ஒருயிர் கண்டனம் யாம் இன்றி யாவையுமாம் ஏகத்(து) ஒருவன் இரும்பொழில் அம்பல வன்மலையில் தோகைக்கும் தோன்றற்கும் ஒன்ருய் வரும்இன்பத் துன்பங்களே ’’ என்பது அப்பெருமானது திருக்கோவைப் பாடல். உள்ளம் கலந்த காதலர் அன்புலம் கனிய நடத்தும் இல்லற வாழ்வில் நல்லறங்களே ஆற்றுதற்கு ஏற்ற துணையாகும் இல்லாளே, வள்ளுவர் வாழ்க்கைத் துணை என்ற பெயரால் வழங்கினர். அவள்பால் அமையவேண்டிய பண்புகளே வாழ்க்கைத் துணைநலம் என்ற அதிகாரத்தால் இனிது விளக்கியருளினர். இல் வாழ்க்கைக்கு ஏற்ற துணையாகும் பெண்ணிற்கு மனை யறத்திற்குத் தக்க மாண்புகள் வேண்டும். கணவன் வருவாய்க்குத்தக வாழத்தெரியவேண்டும். துறந்தார்ப் பேணலும், விருந்து போற்றலும், வறியார்க்கு இரங்க லும், உறவினர்க்கு உதவலும், மன்னுயிர்க்கு அன்பு செய்தலும் ஆகிய பண்புகள் அமையவேண்டும். வாழ் வுக்கு வேண்டும் பொருள்களே அறிந்து கடைப்பிடித்