பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனேயும் மக்களும் 13. தல், உணவு சமைக்கும் திறன், ஒப்புரவு செய்தல் முதலாய கற்செயல்கள் அமையவேண்டும். இத்தகைய மாண்புகள் உடையாளே வாழ்க்கைத்துணை என்று வழங்குதற்கு உரியாள். அல்லாதவள் வாழ்க்கைப் பகையே ஆவாள். மனையறத்திற்குத் தக்க கற்குண நற்செய்கைகள் ஒருவன் இல்லாளிடத்து இல்லையாயின் அவ் இல் வாழ்க்கை, செல்வத்தால் எத்துணைச் செழிப்புடைய தாயினும் சிறப்புடையதன்று. இல்லாள், தனக்குரிய மாண்புடையவளாக விளங்கில்ை ஒருவற்கு இல்லாதது எதுவுமில்லை. அவன் எல்லாம் கிறைத்தவன். இல்லதென் இல்லவள் மாண்பாகுல் உள்ளதென் இல்லவள் மாளுக் கடை” என்று கேட்பார் திருவள்ளுவர். இதனையே தமிழ் மூதாட்டியாரும், இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லே' என்று வலியுறுத்துவார். சிறந்த மனைவியாவாள் யாவள் வள்ளுவர் இதற்கு வரையறுத்த இலக்கணத்தை ஒரு குறட் பாவிலேயே வகுத்தருளுகின் ருர். தற்காத்துத் தற்கொண்டாம் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலான் பெண்” என்பது அவரது உறுதிமொழி. பெண்ணுவாள் கற்பி னின்றும் பிறழாமல் தன்னக் காத்துக்கொள்ள வேண்டும். தன் கணவனே உண்டி முதலியவற்ருல் கன்ருகப் பேணவேண்டும். தன்பாலும் கணவனிடத் தும் நன்மை அமைந்த புகழ் நீங்காமல் போற்றவேண் டும். மனையறத்திற்குத் தக்க மாண்புகளினும் மறதி வ. சொ-2