பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i4 வள்ளுவர் சொல்லமுதம் யில்லாதவளாக இருத்தல் வேண்டும். இச்செயல்களில் என்றும் மாருத உறுதியுடையாளே சிறந்த மனைவி ஆவாள் என்று பெண்ணிலக்கணம் பேசினர். மகளிரிடத்துக் கற்பு என்னும் கலங்காத திண் மைக்குணம் அமையவேண்டும். கற்புடைய மகளிர் கடவுள் தன்மை வாய்ந்தவர். அத்தகைய மகளிரை மனேவியராகப்பெற்ற கணவர்க்கு இல்லாளே பெருஞ் செல்வம் என்பர் வள்ளுவர். கற்புடைய மகளிர், தம் கணவரையன்றிப் பிற தெய்வங்களைக் கனவினும் வணங்கார். கணவர் அடிவருடிப் பின் தூங்கி முன் னெழும் பேதையர்க்குத் தெய்வமும் ஏவல் கேட்கும். மாதர் கற்புடை மங்கையர்க்கென்றே மாதம் ஒரு மழை பொழிதல் உண்டு என்பர் உயர்ந்தோர். கற்பரசி யாகிய கண்ணகி கடவுளெனக் கோவில் எடுத்து வழி படும் பெருமை கொண்டாள் அன்ருே ! மாதரைக் கணவர் சிறையால் காப்பது ஏலாத செயல். அவர் தம்மை கிறையால் காக்கும் காப்பே தலையாயது என்பர். அன்னர் கற்பினே உயிரினும் சிறந்ததாகக் கருதிக் காத்தல் வேண்டும். உயிரினும் சிறந்தன்று நானே நாணினும் செயிர்திர் கசட்சிக் கற்புச் சிறந்தன்று' என்று தொல்காப்பியம் சொல்லும், மகளிர்க்கு அமையவேண்டிய நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் நாற்பண்புகளுள் காணம் உயிரினும் சிறங் தது என்பர் தொல்காப்பியர். அங்காணத்தினும் கற்பு மானுடையது என்று வற்புறுத்துவர். இக் கற். பினல் புகழைப் பொற்புற காட்ட விரும்பிய கங்கையை மனைவியாகப் பெற்றவர்க்கத் தம்மைப் பழித்துரைக்