பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனேயும் மக்களும் 15 கும் பகைவர்முன்னும் ஏறுபோல் பீடு கடை உள தாகும். அன்னவளே நன்மனைக்கு விளக்கம் தரும் இங்கையாவள். மனேயாளது மாட்சி, ஒருவற்கு மங் கலம் என்றே உரைத்தருளுவார் வள்ளுவர். மனையறப் பெருவாழ்வின் அணிகலனுய்த் திகழ் வது கன்மக்கட் பேறு ஆகும். மங்கலம் என்ப மனேமாட்சி மற்றதன் நன்கலன் நன்மக்கட் பேறு' என்பது வள்ளுவர் சொல்லமுதம். மனேக்கு விள்க்கம் அளிப்பவர் மங்கையரே அவர்க்கு விளக்கம் தருபவர் தகைசால் புதல்வரே என்று நான்மணிக்கடிகை கவிலும்.

  • கடவுட் கற்பொடு குடிக்குவிளக் காகிய புதல்வர்ப் பயந்த புகழ் மிகு சிறப்பின்' என்பது அகப்பாடல்.

அன்பினுக் காகவே வாழ்பவரார்?-அன்பில் ஆருயிர் போக்கத் துணிபவரார்? இன்ப உரைகள் தருபவரார்?-வீட்டை இன்னகை யால்ஒளி,செய்பவரார்? எல்லாம் பெண்கள் அன்ருே அவர்தம் பங்கயக் கைகளின் நலத்தை நோக்கியன் ருே பாரில் அறங்கள் வளர்கின்றன. பிச்சை கேட்பவனும், அம்மா ! பிச்சை ' என்றுதானே கேட்கின் முன் ஆதலின் இவ் வுலகில், மங்கைய ராகப் பிறப்பதற்கே-நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா’’ என்று மகளிர் பெருமைகளைக் கவிமணி விளக்குவார். இல்லறத்தே புகுந்த கல்ல்ார்க்கு விளக்கம் தரு