பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனேயும் மக்களும் 17 படுத்தப்பெற்ருன். பல்லாண்டு மக்கட்பேறு இன்றி வருந்தி மயங்கினன். பின்னர் அதனைப் பெற்றுப் பேருவகை உற்ருன். அவன், தன் பெயருக்கேற்ப கல்லறிவு நிறைந்த நம்பியராய்த் திகழ்ந்தானதலின், தான் பெற்ற இன்பத்தைப் பிறர்க்கும் காட்ட எண் னினன். தனது இளஞ்சிருர்கள் செய்யும் இன்பச் சிறு தொழில்களைக் கண்டு மகிழ்ந்தான். அச் செல்வச் சிறுவர்கள் தம்முடைய சிறுகை நீட்டிக் குறுகுறு நடந்துவந்து, உண்ணும் உணவில் தம் இரு கைகளே யும் இட்டும் தோண்டியும் கவ்வியும் துழாவியும், தம் உடலெங்கும் சிதறியும் இன்ப விளையாட்டு ஆடுதலைக் கண்டு அகமகிழ்ந்தான், அவர்கள் சிதறிய உணவை உண்ணுங்கால் உண்டாகும் இன்பம் பெரிதாதலே அறிந்தான். அவர்கள் மிழற்றும் மழலைச்சொல்லும், செய்யும் செயலும் கண்ணுக்கும் செவிக்கும் உடலுக் கும் இன்பம் ஊட்டி அறிவை மயக்குதலின் உயிர் வாழ்வின் பயன் இதுவே என உயிர் அமைந்து போதலை உணர்ந்தான். இத்தகைய கலம் சான்ற மக்களைப் பெருதார்க்கு உயிர் வாழ்வால் முடிக்கக் கூடிய பொருளே இல்லை என்று அறவுரை பகர்க் தான். அவனது பொன்மொழியாக அமைந்த பாடலைக் கானுக: படைப்புப் பலபடைத்துப் பலரோ டுண்ணும் உடைப்பெருஞ் செல்வ சாயினும் இட்ைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் கவ்வியும் து முத்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களே இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தாம்வாழு தானே.”