பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனையும் மக்களும் 19. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனேச் சான்முேன் எனக்கேட்ட தாய்” என்பது அவர் சொல்லமுதம். பொன் முடியார் என்ற பெண்புலவர், பலர் ஆற்றவேண்டிய கடமைகளே ஒரு பாட்டில் குறிப் பிட்டார்.

  • ஈன்று புறந்தருதல் என்தலைக்கடனே.

சான்ருேன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே’’ என்று கூறி, மக்களைச் சான்ருேர் ஆக்கும் பொறுப் பினைத் தந்தைக்குச் சுமத்தினர். இங்ங்ணம் அறிவா னும் குணத்தானும் பெரியராக்கிய தங்தைக்கு, மக்க ளும் ஆற்றும் உதவி ஒன்று உண்டு. இத்தகைய சிறந்த மக்களைப் பெறுதற்கு இவரது தந்தையர் என்ன தவம் இயற்றினரோ ? என்று வியந்து போற் றும் புகழ்ச்சொல்லே விளக்கவேண்டும். இத்தகைய நன்மக்களே, பெற்ருேர்க்கு விளக்கம் தரும் பெற்றியர் ஆவர்.