பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வியும் கேள்வியும் 21 வேண்டும். இத்தகைய கல்லாசிரியனுக்குப் பணிந்து கல்வியைப் பயிலுதல் வேண்டும். உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்ருர் கடையரே கல்லா தவர்' இங்ங்னம் தெய்வப் புலவர், கல்வி பயிலும் முறை மையை வரைவார். செல்வர் முன்பு பணிந்து இரந்து நிற்கும் ஏழையாளரைப் போல, ஆசிரியன்பால் மாணவன் பணிந்து நின்று பாடம் கேட்டல் வேண்டும். அவ்வாறு கற்றவனே கலே வல்ல தலைவனுவான். அங்ங்ணம் கல்லாதவர் எல்லாரும் கடையர் என்பது வள்ளுவர் கருத்து. மாணவன் கற்பனவற்றைக் கசடறக் கற்றல் வேண்டும். ஐயம் திரிபுகளாகிய குற்றங்கள் அகலக் கற்கும் கல்வியே பயனுடையதாகும். ஆதலின், கற்க கசடறக் கற்பவை” என்பார். தெளிவுறக் கற்ற கல்வியே உளத்திற்குத் தீஞ்சுவை பயக்கும். உலகில் எண்ணிறந்த நூல்கள் உள்ளன. பரந்த கடலேப் போன்று விரிந்து நிறைந்துள்ளன. அத்தனை யும் கற்றறிதல் எத்தகையார்க்கும் ஏலாத செயலே. ஆதலின் வள்ளுவர், கற்பவை என்ற சொல்லால் நூல்களைப் பாகுபாடு செய்கின்ருர் கற்றற்குரிய நூல்களையே கற்றல் வேண்டும் என்பதை வற்புறுத்து கிருர், அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய உறுதிப்பொருள்களை உணர்த்தும் நூல்களையே ஓதி யுணர்தல் வேண்டும். 'அலகுசால் கற்பின் அறிவு நூல் கல்லா(து) உலகநூல் ஒதுவ தெல்லாம்-கலகல கூஉம் துணையல்லால் கொண்டு தடுமாற்றம் போஒம் துணையறிவார் இல்”