பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 வள்ளுவர் சொல்லமுதம் என்று காலடியார் நவிலும். உறுதிப் பொருள்களை அறிவுறுத்தும் உண்மையான நூல்களேயே கற்றல் வேண்டும். பிற உலக ஞானத்தைப் பெருக்கும் நூல்களே ஒதுவதெல்லாம் மறுமை இன்பம் பெறு தற்கு உறுதுணை புரிவனவல்ல. பிறவிப் பிணியாகிய தடுமாற்றத்தைப் பெயர்த்தெறியும் பெற்றி அவ் வுலக நூல்களுக்கு இல்லே. க ல் வி யோ கரையற்ற கடல் போன்றது. அதனேக் கற்பவராய மக்கள் வாழ்நாளே மிக்க குறைவு. அங்ங்னம் குறைந்த வாழ்நாளுள்ளும் பல் வேறு பிணிகள் வந்து பற்றிக் கொள்கின்றின. ஆதவின், ஆராய்ந்து அமைவுடைய நூல்களையே ஆன்ருேர் கற்பர். இம்முறையில் கற்றவரையே மற்றவர் மதிப்பர். எக்குடிப் பிறப்பினும் யாவரே. யாயினும் கல்விச் சிறப்புடையாரையே எவரும் வருக வென்று ஏற்றுப் போற்றுவர். 'கற்ருரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும்' என்று, சிலர் ஒரு சில நூல்களைக் கற்றவளவில் அமைதியுற்று விடுகின்றனர். இறக்கும் வரைக்கும் கற்ருலுங்கூட முற்ற உணர்தல் முடியாது. இதேைலயே பேரறிஞர்கள் என்றும் மாணவராக இருக்க விழைந்தனர். இடையருது, ஓய்ந்த வேகள் யெல்லாம் ஆய்ந்து கற்றல் வேண்டும் என்பதே வள்ளுவர் கருத்து. ஆதலின்,

  • யாதானும் நாடாமால் ஊராமால் என்ைெருவன்

சாந்துணேயும் கல்லாத வாறு ” என்று சொல்லியருளினர். ஒருவன் எத்தனை நூல் களேக் கற்கிருனே, அத்துண்ை அறிவு வளர்ச்சியடை