பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வியும் கேள்வியும் 23 வான். மணலில் தோண்டும் ஆழத்தின் அளவாகவே தண்ணர் ஊறுவதைக் கண்ணுரக் காண்கிருேம். அதுபோலவே கற்ற அளவே கலேகலம் பெருகும் என்பது தெளிவு. இவ்வாறு கற்றுணர்ந்த கல்வி அறிவே என்றும் அழியாத விழுச்செல்வம். மற்றைய பொன்னும் பொருளும் மாடும் மனையும் ஆகிய செல்வங்கள் அழிந்து போகும் கிலேயாமை உடையன. ஒரு பிறப் வில் கற்றுப் பெற்ற கல்வி, எழு பிறப்பும் தொடர்ந்து வந்து இன்பத்தை ஊட்டும். இம்மை இன்பம் நம்மை அடையுமாறு செய்வது நல்ல கல்வியே. மாண வர்க்கோ, மனத்தோடு கேட்பார்க்கோ சொற் கொடை புரிவதால் வருவதொரு கேடும் இல்லை. மன்ன உலகத்து மன்னிய புகழை கண்ணுமாறு பண்ணும். மம்மர் அறுக்கும் மருந்தாக விளங்கும். இத்தகைய கல்வி அழகே அழகு" என்று கற்றறிக் தார் போற்றுவர். 'கற்றல் கேட்டல் உடையார் பெரியர்” என்று பாடுவார் ஞானசம்பந்தர். கற்றலிற் கேட்டலே நன்று” என்பது பழமொழி. ஒருவன் பல நூல் களைக் கற்றல் மட்டும் போதாது. கற்றுணர்ந்த கல்லார் சொல்லக் கேட்டல் வேண்டும். அங்ங்னம் கேட்குங் காலையில்தான் கற்றகல்வி, கருத்து விளக் கம் பெறும். ஐயம் திரிபுகள் மெய்யாகவே அகலும். பலகால் கற்றுணரும் கருத்தொன்றைத் தக்கார் வாயிலாக ஒருகால் கேட்டதுணையானே உள்ள்த்தில் பதித்துக் கொள்ளலாம். பல்லாண்டு முயன்று பயின்று உணரும் அரிய உண்மைகளே எல்லாம்