பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வள்ளுவர் சொல்லமுதம் சிறிய கால அளவுக்குள் சிறந்தார்வாய்க் கேட்டலால் எளிதில் தெரிந்து மகிழலாம். இதேைலயே தெய்வப் புலவராய திருவள்ளுவர்,

  • செல்வத்துன் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலே ' என்று இயம்பியருளினர். கேள்வியால் பெறும் அறிவைச் செவிச் செல் வம் என்று போற்றினர் நம் புலவர். அதுவே தலேயாய செல்வம் என்றும் குறித்தார். இதனைச் செவி உணவு என்றும் கூறினர். செவியுணவாய கேள்வி அறிவைப் பெற்றவர், அவியுணவைக் கொள் ளும் ஆன்ருேராகிய தேவரோடு ஒப்பர் என்று உரைத் தருளினர். தவலரும் தொல் கேள்வித் தன்மை உடையார், தம்முட் கூடி உரையாடி மகிழும் இன்பம் உம்பர் உலகினும் காண இயலாது என்று சொல்லும் காலடியார். சொல்லின் செல்வராய நல்லார் ஒருவர், தம் காவன்மை சிறக்கச் செந்தேன் ஒழுகக் கேட்பவர் சிங்தை குளிரச் சீரிய பேருரை வழங்குவராயின், மக்கள் மதுவுண்ட வண்டென மயங்கி இருத்தலேக் காண்கின்ருேம் அன்ருே அத்தகைய கேள்வி என்னும் செவிக்குணவு இல்லாத போழ்துதான் சிறிது வயிற்றுக்கு உணவு வழங்குதல் வேண்டும் என்பர் வள்ளுவர். இத்தகைய கேள்வி அறிவு, கல்வி அறிவைத் தெளிவு படுத்திக் கலநலத்தை வளமுறுத்தும் வன்மை உடையது. பணிவும் இன்சொல்லும் கனி யும் உயர்பண்பை கனிவளர்ப்பது. வாழ்வில் தளர்ச்சி வந்தபோழ்து, அதனை அகற்றி உள்ளக் கிளர்ச்சி