பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வியும் கேள்வியும் 25 பினை ஊட்டவல்லது. வழுக்குடைய நிலத்தில் ஊன்று கோல் உதவுமாறுபோல, உறுபயன் விளக்கும் பெருநலம் உடையது அக் கேள்வி. ஆதலின் 'கற் நிலன் ஆயினும் கேட்க” என்றும், “எனத்தானும் கல்லவை கேட்க' என்றும் வள்ளுவர் வற்புறுத்துவா நயினர். இத்துணைக் கூறியும் அறியாது வாய்ச்சுவை ஒன்றே கண்டு உண்டு உழலும் மக்களை மாக்கள் என்று பழித்துரைத்தார் 5ம் புலவர் பெருமான். அவர்கள் இருந்தாலென்ன இறந்தாலென்ன என்று கடிந்து.மொழிந்தார். 6 செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்? என்பது வள்ளுவர் வாய்மொழி. இங்ங்ணம் கல்வி கேள்வி அறிவுகளைப் பெற்ற வரே உலகத்தோடு பொருந்த ஒழுகுவர். உயர்க் தோரைப் பின்பற்றி ஒழுகத் தெரியாத மக்கள் எவ்: வளவு கல்வியைக் கற்றும் எள்ளளவும் பயனில்லை. பல கற்றும் அறிவிலாதார்" என்றே பழிக்கப் படுவர். 'ஊருடன் கூடிவாழ்” என்று சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார் தமிழ்மூதாட்டியார். 'ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்' என்றும் கூறினர். ஊருடன் கூடி, உலகுடன் ஒத்து வாழக் கல்வியும் கேள்வியும் உற்ற துணைக்கருவிகளாகும்.