பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு. அன்பும் அறமும் அன்பு, அனைவர்க்கும் அ ைம ய வேண் டிய உயர்ந்த பண்பு. மக்கள் வாழ்வுக்கு அடிப்படையான பண்பும் அன்பே. இவ் அன்பென்னும் அடிப்படை யின் மேலேதான் அறமாளிகை நிறுவப்பட வேண் டும். ஆதலின், மக்கள் அறவாழ்வை வகுத்துச் சொல்லத்தொடங்கிய வள்ளுவர் பெருமான் முதலில் அன்பையே மொழிந்தருளினர். அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது” என்பது தெய்வப் புலவர் திருவாக்கு இல்லற வர்ழ் வுக்கு அன்பு பண்பாக அமையவேண்டும்; அறம் பயனுக அமையவேண்டும். மனேவியும் மக்களும் முத ல்ாய தொடர்புடையாரிடத்துக் கொள்ளும் காதலே அன்பு என்பர் பரிமேலழகர். இவ் அன்பை அறிவது எங்ங்னம்: அன்பர்கள் துன்புறுங்காலத்து, அவர்ப்ால் அன்புசெய்த நண் பர்தம் கண்ணில் சிந்தும் சிறுகண்ணிரே அவரது உள்ளன்பைப் பலரும் அறிய வெளிப்படுத்தும். ஆதலின் அன் ைப அடைத்துவைக்கும் தாழ் உண்டோ? என்று கேட்பார் நம் முதற்பாவலர் அன்பு நெறியில் செல்லும் உடம்பையே உயிர் நின்றி உடம்பு என்னலாம். அன்பிலார்க்கு உள்ள உடம்பு எலும்புகளைத் தோலால் போர்த்துவைத்த வெற். றுடம்பே. உள்ளத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர்வாழ்க்கை, பாலே நிலத்தில் பட்ட மரம் தளிர்க்