பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வள்ளுவர் சொல்லமுதம் கடவுள் அன்பு வடிவானவன். 'அன்பே கடவுள் என்று ஆன்ருேர் இயம்புவர். 'அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்’ என்பர் திருமூலர். இறைவன் அன்பு என்னும் பிடிக்குள் அகப்படும் மலேயாவான். அன்பு என்னும் குடிசையுள் புகுந்து வாழும் அரசவைான். அன்பு என்னும் வலைக்குள் விழும் பரம்பொருள் ஆவான் அன்பு என்னும் கரத்தில் அமரும் அமுதமாவான் அன்பு என்னும் குடத்துள் அடங்கும் கடலாவான் அன்பு என்னும் உயிரில் ஒளிரும் அறிவாவான் அன்பு என்னும் அணுவுள் அமைந்த பேரொளி யாவான். இங்ங்ணம் அன்பு வடிவாய் இலங்கும் இறைவன் அன்பால் ஈர்க்கப்படும் திறத்தை இராடி விங்க அடிகளார். இனிது விளக்குவார். ஆதலின், ஈசனுக்கு நேசராக எவ்வுயிர்க்கும் அன்பு செய்தல் வேண்டும் என்பர் ஆன்ருேர், ஒருயிர், மற்றேர் உயிரிடத்துக் காட்டும் அன்பு, உறவு முறையால் பல திறத்தனவாகும். கணவன் மனேவியிடத்துக் காட்டும் அன்பு, மனைவி கணவ னிடத்துக் காட்டும் அன்பு, தந்தை மைந்தனிடத்துக் காட்டும் அன்பு, மைந்தன் தந்தையிடத்துச் செலுத் தும் அன்பு, தாய் சேயிடத்துக் காட்டும் அன்பு, சேய் தாயிடத்துச் செலுத்தும் அன்பு, தமையன் தம்பி யிடத்தும், தம்பி தமையனிடத்தும், தமக்கை தங்கை யிடத்தும், தங்கை தமக்கையிடத்தும் செலுத்தும் அன்பு எனப் பலவகைப்படும். இவற்றுள் தாய் சேயின்பால் காட்டும் அன்பே த லே சிறந்தது.