பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பும் அறமும் 39 அதற்கு இணையாக எவரது அன்பையும் இயம்ப முடி பரிது. 'பால் நினைந்து ஊட்டும் தாய்” என்று பாராட்டினர் மாணிக்கவாசகர். இறைவன் உயிர்களிடத்துக் காட்டும் இணையற்ற பேரன்புக்கு உலகில் தாயன்பு ஒன்றைத்தான் உவமையாக உரைக்கமுடியும். ஆதலின் 'பால் கினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து இன்னருள் புரிந்தான் ” என்று மணிவாசகர் பேசியருளினர். 'தாயிற் சிறந்த தயாவான தத்துவனே' என்றும் போற்றுவார். இத்தகைய சிறப்புவாய்ந்த அன்பினால்தான் உலகில் அறத்தை ஆற்ற முடியும். செய்யத் தக்கது. இன்னதென, ஆன்ருேரால் வரையறுக்கப் பெற்றதே அறம் எனப்படும். அறுதியிடப் பெற்றது அறமா யிற்று. அன்னேரால் செய்யத் தகாதென மறுக்கப் பெற்றது மறமாயிற்று. அறம், பொருள், இன்பம் என்ற மூன்றனுள் பொருளும் இன்பமும் இம்மையில் மட்டுமே இன்பம் விளம்பன. அறமோ எனின் இம்மை மறுமை வீடென்னும் மூன்றையும் ஒருங்கு பயக்கும் பெருங்குணம் உடையது. ஆதலின் வள்ளு வர் பெருமான், பொருள் இன் பங்களைக் காட்டினும் வலியுடைத்து அறம் என்பதை அறிவுறுத்த 'அறன் வலியுறுத்தல்” என்ருேர் அதிகாரத்தையே வகுத் தருளினர். அறத்தின் இலக்கணம் யாது? இதனைத் தெளி வுறச் சொல்ல விரும்பிய வள்ளுவர், தம் ஈரடிப் பாவி, லும் ஒரடியாலேயே உறுதிபெற உரைத்தருளினர். 'மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தற்ன்' 3سس.T تي (ه) . له