பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3{} வள்ளுவர் சொல்லமுகம் இவ் ஒரடியிலேயே அறத்தின் முடிந்த இலக்கணம் வரையறுக்கப் பெற்றுவிட்டது. உள்ளத்தில் கள்ளம் இல்லாதிருத்தலே நல்லறம் ஆகும். “மனத்துக்கண் மாசு' என்று சுருங்கச் சொல்லிய வள்ளுவர், அடுத்த பாவிலேயே அதற்கு விளக்கம் தருகின்ருர். அழுக் காறு, அவா, வெகுளி, இன்ச்ைசொல் என்ற மாசு கள் மனத்தைவிட்டு அகல வேண்டும். அவற்றைக் கடிந்து கடத்துவதே நல்லறமாகும் என்பர். 'அழுக்கா(று) அவாவெகுளி இன்னுச்சொல் நான்கும் இழுக்கா இயன்ற(து) அறம்' என்பது அவரது வாய்மொழி. இப் பாவில் உள்ள நான்கு மாசுகளே ஏழாகப் பெருக்கிப் பேசும் பேரறி ஞரும் உளர். கான்கு என்ற எண்ணே இன்னச் சொல் லுக்கே உரியதாக்கிப் பொய், குறளே, வன்சொல்; பயனில் சொல் எனனும் நால்வகை இன்னச் சொற் களையும் அகற்ற வேண்டும். பொருமையும் ஆசையும் கோபமும் ஆகிய குற்றங்கள் போக்கவேண்டும் என்று அவர்கள் பொருள் காண்பர். மாசுகள் நீங்கிய மனத்தின் கண் அன்பு நிறைந்து ஆற்றும் அறத்தை இடையருமல் செல்லும் இடமெல் லாம் செய்தல் வேண்டும். ஒல்லும் வகையான் உவந்து ஆற்றுதல் வேண்டும். இப்போது இளம் பருவத்தை உடையோமாதலின் முதுமையில் செய் வோம் என்று எண்ணுது எப்போதும் இயற்றல் வேண்டும். ஒருவன் வாழ்நாளில் அறம் செய்யாது கழிந்த நாள் ஒன்றேனும் உளதாகாமல் என்றும் கன்றே செய்தல் வேண்டும். அங்கனம் செய்த அறம், உயிர் உடலே விட்டு நீங்கும் காலத்துப் பாது