பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பும் அறமும் 31 கான துணையாகப் பற்றிவரும் என்று வள்ளுவர் சொல்லுவார். క్షá பற்றித் தொடரும் இருவினப் புண்ணிய பாவமுமே ' என்று பட்டினத்தாரும் கட்டுரைத்தனர். அவ் அறமே மீண்டும் பிறவி தோன்ரு வண்ணம் தடுக்கும் பெருந்தடை ஆகும் என்று பேசுவார் வள்ளுவர். திருக்குறளுக்கு இணையாக வைத்து எண்ணப் படும் நாலடியாரும், நல்லறம் புரியும் நாளேப் பற்றிச் சொல்லுகின்றது. 'மரம் ஒன்றில் கனிகளும் காய் களும் நிறைந்து காணப்படுகின்றன. பெரிய சுழற் காற்று வீசிற்று. அக் காற்றின் ஊற்றத்தால் கனி கள் தாம் உதிரும், காய்கள் உதிரா என்று யாரேனும் கூற இயலுமோ? பிஞ்சுக் காய்களுங்கூட அப் பெருங் காற்ருல் வீழ்ந்துவிடலாமன்ருே அதுபோலத்தான் மக்கள் வாழ்வும் அமையும் என்கிருர் ஒரு சமண, முனிவர். -

முற்றியிருந்த கனியொழியத் தீவளியால்

தற்காய் உதிர்தலும் உண்டு’ என்பது அம் முனிவர் மொழி. குழந்தை பிறந்த வுடனே இறந்து போதலும் உண்டு. தக்க இளம் பருவத்தில் இறத்தலும் உண்டு. முறையே முதுமை பெருகி மறைதலும் உண்டு. ஆதலின், "யாம் இளை யம் என்னது கைத்துண்டாம் போழ்தே கரவாது அறம் செய்ம்மின்' என்று மக்களே ஏவினர். இவ் அறத்தை ஆற்றும் முறைமையை விளக்கப் போந்த முனைப்பாடியார் என்னும் மூதறிஞர், அறத் தைப் பயிர் என்று உருவகப் படுத்தினர். அறக்