பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வள்ளுவர் சொல்லமுதம் கதிர்ப் பைங்கூழைப் பயிரிடும் திறத்தைத் தெளி வுறக் காட்டுகிருர், இன்சொல் விளைநிலன. ஈதலே வித்தாக வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி அன்பு:நீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர் பைங்கூழ் சிறுகாலச் செய் ’’ என்பது அப்புலவரது அருமைப் பாடல். அறமாகிய கதிரைத் தோற்றும் நறும்பயிர் செழிக்க நன்னில மாய் அமைவது இன்சொல்லே. அவ் இன்சொல் ஆகிய விளைநிலத்தில், ஈதலை வித்தாக விதைத்தல் வேண்டும். இடையே தோன்றும் வன்சொற்களாகிய களைகளைப் பிடுங்க வேண்டும். உண்மை என்னும் உரத்தை இடுதல் வேண்டும். அன்பு என்னும் தண்ணிரைப் பாய்ச்சுதல் வேண்டும். இவ்வாறு ஈதலாகிய விதையை விதைத்துப் பயிர் செய்தால் அறமாகிய கதிரைத் தரும் பெரும்பயிர் அணியுற்று ஓங்கி வளரும் என்று உரைத்தருளினர் அப் புலவர் பெருமான். இங்ங்னம் அறத்தைப் புரிவதால் விளையும் பயன் யாது? இம்மையில் செல்வமும் மறுமையில் வீடுபேறும் இனிது பெறுவர். எடுக்கின்ற பிறவிதோறும் இனிய துணையாக வந்து பயனேத் தந்திடும். இவ்வாறு பயன் தரும் இயல்பை, அளவைகள்கொண்டு நிறுவ வேண்டாம்; கண்களாலேயே கேரில் கண்டுகொள்ள லாம் என்பர் திருவள்ளுவர். பல்லக்கைச் சுமப்பவன், அதில் அமர்ந்து செல்லுபவன் ஆகிய இருவர் கிலைகளி னின்றே அறத்தின் பயனை அறிந்துகொள்ளலாம் என்று சொல்லுவர்.