பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பும் அறமும் 33 அறத்தை ஆற்றுதற்குரிய நிலைகளை இரண்டாக வகுத்தார் நம் பொய்யில் புலவர். அவை இல்லறம், துறவறம் என்று சொல்லப்படும். இவற்றுள் இல் லறமே நல்லறம் என்றும் அதுவே முதன்மை வாய்க் தது என்றும் மொழிந்தருளினர். அறம் என்று சிறப் பித்துச் சொல்லத்தக்கது இல்லறமே என்பதை நன்கு வலியுறுத்துவார். அறன் எனப்பட்டது இல்வாழ்க் கையே, என்று உறுதி தோன்ற உரைப்பார். கருத் தொருமித்த காதல் மனையாளுடன் கனியும் சுவையும் போலக் கூடிக் களிப்புடன் நடத்தும் சிறப்பான இல் லறமே சீரிய கேரிய பேரறமாகும் என்பது தெய்வப் புலவர் திருவுள்ளம்.