பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. விருந்தும் மருந்தும் விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்பது தமிழில் வழங்கும் திருந்திய பழமொழி. தொன்று தொட்டு விருந்தும் மருந்தும் தொடர்புடையனவாகவே விளங்கி வருகின்றன. மருந்தே ஆயினும் விருந்தோடு உண், என்பார் அருந்தமிழ் மூதாட்டியார். தெய்வப் புலவராகிய திருவள்ளுவரும்,

  • விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.” என்று விருத்தையும் மருந்தையும் பொருந்தவே தெரிந்து கூறினர்.

விருந்து என்னும் சொல் புதுமை என்று பொருள் படும். புதியராய் இல்லம் புகுந்த மக்களே விருந்தினர் என்று போற்றத் தகுவர். இவ் விருந்தினரை உரை யாசிரியராகிய பரிமேலழகர் இருவகைப் படுத்துக் கூறுவார். பண்டறி வுண்மையிற் குறித்து வந்தாரும் அஃதின்மையிற் குறியாது வந்தாரும் எனப் பிரிப்பர். முன்பொருகால் அறிமுகம் ஆனது கருதி வந்தவர், அறிமுகம் இல்லாமலே புதியவராகப் புகுந்தவர் ஆகிய இன்னவரே விருந்தினர் ஆவார். இங்ஙனம் புதியராகப் போக்தவரை அன்புடன் வரவேற்றுப் போற்றும் மரபு, பண்டுதொட்டுப் பழங் தமிழ்நாட்டிற்கு உண்டு. இல்லறம் பேணும் நல்லியல்பு உடையார், முதற்கண் போற்றவேண்டிய அறம், விருந்தோம்பலே. ஆதலின், வள்ளுவர் பெருமான்