பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 வள்ளுவர் சொல்லமுதம் அனிச்சப்பூ மிகவும் மென்மை வாய்ந்தது. அது மோந்து பார்த்த அளவிலே வாடிப்போகும். மலர்ந்த முகத்தைக் காட்டாதொழிந்தால், அவர் வாட்டமுற்று வந்த வழியே திரும்புவர். ஆதலின், அனிச்சப் பூவி லும் விருந்தினர் மெல்லியர் எ ன் று வள்ளுவர் சொல்லுவார். " மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து தோக்கக் குழையும் விருந்து ” என்பது அவரது பொய்யாமொழி. செந்தமிழ் நாட்டினர் விருந்தினரைச் சிறந்த முறையில் பேணுவர். பெண்களே இச் செயலில் பெருத்த கவனத்தைச் செலுத்துவர். வீட்டில் ஆடவர் இல்லாத வேளையில் விருந்தினர் எவரேனும் வருவ ராயின் பெண்டிர், தம் பிள்ளைகளைக்கொண்டு வர வேற்று உபசரித்து அனுப்புவர். இச்செய்தியைச் சிறுபாணுற்றுப்படை, மலைபடுகடாம் போன்ற பழங் தமிழ் நூல்களில் காணலாம். கற்பரசியாகிய கண்ணகி, தன் கணவனைப் பிரிந்து வாழ்ந்த நாளில் தனக்கு ஏற்பட்ட குறைக ளாகச் சில செய்திகளைக் குறிப்பிடுகின் ருள். " அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஒம்பலும் துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை." என்று கண்ணகி கோவலன் பால் கவன்று கூறு கின்ருள். அறவோரையும் துறவோரையும் அந்தண ரையும் விருந்தினரையும் போற்ருத குறையே பெருங் குறையென அவள் வருந்திப் பேசிள்ை. விருந்து போற்றும் சிறந்த அறம் பழந்தமிழ் முன்ைேரால்