பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருத்தும் மருந்தும் 37 பெரிதும் பாராட்டப்பெற்றது என்பதைத், 'தொல் லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடல்,' என்ற தொட ரால் இனிது உணரலாகும். - இலங்கை வேந்தனகிய இராவணனுல் அசோக வனத்தில் சிறை வைக்கப்பெற்ற சீதை, இராம பிரானப் பலவாறு நினைந்து உள்ளம் வருந்தினுள். அங்ங்ணம் வருந்தும் வேளையில்,

  • விருந்து கண்டபோது என்னுறு மோவென்று விம்மும்’ எனவும் கவியரசராகிய கம்பர் கட்டுரைத்தார். மேலும் கோசல நாட்டு மகளிர் மாண்பைக் கூறவந்த கம்பர் பெருமான்,

பெருத்தடங்கண் பிறைநுத லார்க்கெலாம் பொருந்து செல்வமும் கல்வியும் ஆத்தலால் வருந்தி வந்தவர்க்(கு) ஈதலும் வைகலும் விருந்து மன்றி விளைவன யாவையே’ என்று பாடியருளினர். கோசல நாட்டுக் கோதையர் செல்வத்தாலும் கல்வியாலும் சிறந்து விளங்கினர். ஆதலின் வருந்தி வந்த வறுமையாளர்க்குப் பொருளே வழங்கினர்; நாள்தோறும் தமது வீட்டை காடிவந்த விருந்தினரை விரும்பிப் பேணினர். கண்ணன்ன கணவருடன் ஊடிய காதல் மகளிர், தமது ஊடல்காலத்தில் விருந்தினர் வீ ட் ைட அடைந்துவிட்டால் அதனே மறந்து உபசரிப்பர். ஆடவர், தம் மனைவியர் கோபமாக இருத்தலே அறிக் தால் அதனைத் தணித்தற்கு விருந்தினரை உடன் அழைத்து வருதலும் உண்டு. இதனே, விருந்து கண்டு ஒளித்த ஊடல்,' என்று பழந்தமிழ் நூல்கள் பாராட்டும். -