பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வள்ளுவர் சொல்லமுதம் விருந்தோடு பொருந்த மருந்தை உரைத்த திரு வள்ளுவர் அதனைச் சாவா மருந்தெனச் சாற்றினர். தேவாமுதமே சாவா மருந்தெனக் கூறுவர் உரை யாசிரியர். உடம்புள் தங்கிய உயிரைக் காத்து ஒம்பு தற்கு உற்ற மருந்தாய் உதவுவது உணவே ஆகும். பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுகென ஆதிரை இட்டனள் ஆருயிர் மருந்தென்' என்று மணிமேகலைக் காப்பியம் இயம்பும். பசிப்பிணி அறுக்கும் அமுத நல்லுனவே ஆருயிர்க்கு மருந்தாய் அமையும். உணவே உயிரைக் காக்கும் ஒப்பற்ற மருந்தாகத் திகழ்வதை அக் காப்பியம் கன்கு வலி யுறுத்தும். ' மண்டினி ஞாலத்து வாழ்வோர்க்(கு) எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே' என்று போற்றுவர் சீத்தலேச்சாத்தனர். பாண்டிய நாட்டுப் பொதிய மலேயில் உயிரை நீடு வாழ்விக்கும் உயர்ந்த மருந்தாகச் சில கனிகள் காணப்பெற்றன. அவற்றுள் பன்னிராண்டுகட்கு ஒருமுறை பழுப்பதாகிய காவற்கனி ஒன்று. மற். ருென்று அதியமான் பெற்ற அமுத நெல்லிக்கனி, நன்மருந்தாய் அமைந்த காவற்கனி, தன்னை உண்டவ ரது பன்னிராண்டுப் பசியை அகற்றவல்லது. பெருங் குலேப் பெண்ணேயின் கருங்கனியன்ன பருமன் உடை யது. இதனைப் பற்றிய வரலாறு ஒன்று மணிமேகலை நூலுள் பேசப்படுகின்றது. தமிழ்முனிவன் வாழும் அப் பொதியமலையில் விருச்சிகன் என்ருெரு முனிவன் பெருந்தவம் புரிந் தான். பன்னிராண்டுகட்கு ஒருமுறை நெடுந்தவம்