பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருந்தும் மருந்தும் 33 முடிந்து நீள்பசி ஆற்றுவான். அவனது பெரும் பசியை அம் மலைக்கண் பன்னிராண்டுகட்கு ஒரு முறை பழுப்பதாகிய நாவற்கனியே அகற்றி வாழ்விக்கும். ஒருகால் தனது நெடுந்தவம் நீங்கிய அருந்தவன், அமுத நாவற்கனியைக் கொய்து, தேக்கிலே ஒன்றில் கொதிந்து, காட்டாற்றின் கரைமீது அதனை வைத்து நீராடப் போக்தான். அவ்வழியே வந்த கந்தருவ நாட்டுப் புதுமணமகளாகிய காயசண்டிகை என் பாள், அக்கனியைக் காலால் மிதித்துச் சிதைத்துவிட். டாள். அவளது செயலேக்கண்ட அருந்தவன் பெருஞ் சினம் கொண்டான். பருங்கனி சிதைத்த பாவையைப் பன்னிராண்டு தன்னைப்போல் பெரும்பசியால் நலிந்து உழலுமாறு சபித்தான். அச் சாபத்தின் வலிமையால் காயசண்டிகை பன்னிராண்டுகள் இன்னலுற்று வருக் திள்ை. பின்னர், மணிமேகலை அமுதசுரபியினின்று எடுத்து வழங்கிய இன்னமுதை உண்டு, பசி ஒழிந்தாள் என்று மணிமேகலைக் காப்பியம் இயம்பும். அரும்பசி அகற்றும் அமுத நாவற்கனியைப் போன்றே, பல்லாண்டு வாழ்விக்கும் அமுத கெல்விக் கனி ஒன்று அப் பொதியமலைக்கண் விளங்கிற்று. மலையில் வாழும் புளிஞரும் எளிதில் நெருங்க முடியாத மலேஉச்சியில் பெரும்பாறைப் பிளவினில் அவ் அமுதக் கனியைத் தரும் நெல்லிமரம் நீண்டு வளர்க் திருந்தது. அதன் பேராற்றலைத் தவமுனிவர் வாயி லாக, வள்ளல் அதியமான் அறிந்தான். அக் கனியைக் கொய்துவர ஆட்களே ஏவினன். அவரது பெரிய முயற்சியின் பயனக அரிய கனியைப் பெற்ருன். அந்தக் கனியைத் தனது அங்கையில் வைத்து அதன் அருமையை நோக்கிக்கொண்டிருந்தான். இந்த வேளை