பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருந்தும் மருந்தும் - 4觅 என்பது அம் மூதாட்டியாரின் அமுதமொழி. பெரு. மானே பெரிய மலையின் விடரகத்தே விளைந்த நறுங்கனியின் அருமையைக் கருதாது, பெரும்பயனை யும் குறியாது என்பால் உவந்து கொடுத்தனையே! உனது பெருமையை எவ்வாறு எடுத்துர்ைப்பேன் : பாற்கடலில் தோன்றிய அமுதினே மற்றவர்க்குப் பரிக் தளிதது, கஞ்சினைத் தானுண்ட நம்பனேப்போல நானிலத்து மன்னி வாழ்வாயாக!' என்று அதியமான இதயம் குளிர்ந்து வாழ்த்தியருளினர். இங்ங்னம் தமிழகத்தே வாழ்ந்த வள்ளல்களும், தண்ணருள் நிறைந்த செல்வர்களும் மருந்தனைய அரும்பொருளேயும் விருந்தினர்க்கு உவந்துகொடுத்து மகிழ்ந்தனர். தந்தையை இழந்து பெருந்துயர் உழந்த பாரி மகளிர், தம் குடிசைக்கு நள்ளிருளில் பெருமழை யில் நனைந்து வந்த தமிழ்மூதாட்டியாராகிய ஒளவை. யாருக்குக் கீரை உணவைப் பேரின்பமுடன் ஊட்டி னர். அகமும் முகமும் மலர்ந்து அமுதுாட்டிய அம். மகளிர் மாண்பை,

  • அடகென்று சொல்லி எனக்கு ஆரமுதை இட்டார்

கடகம் செறிந்தகை யார்” - என்று மனமுவந்து பாராட்டினர்.