பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லும் செயலும் 43 பகுத்து நவில்வர். பொய், குறளே, கடுஞ்சொல், பயனில்சொல் என்று அவை பகுக்கப்படும். இக் நான்கு சொற்களும் இன்னல் விளைக்கும் வன்சொற் கள் ஆகும். ஆதலின் இனிய சொற்களையே எவ் விடத்தும் எவரிடத்தும் எப்பொழுதும் பேசுதல் வேண்டும். கையிடத்தே குறுஞ்சுவை நிறைந்த கனிகள் இருக்கவும் சுவையற்ற காய்களே உண்பானை என்னென்பது ? உள் ள த் தே இன்சொற்களும் உள்ளனவாக, அவற்றைச் சொல்லிப் பிறரை மகிழ் விக்காது வன்சொற்களைப் பேசித் துன்பத்தை வர வழைத்துக் கொள்வது முறையாகுமோ? இன்சொலால் அன்றி இருநீர் வியனுலகம் வன்சொலால் என்றும் மகிழாது." என்று கூறுவர் சிவப்பிரகாசர். திங்களின் தண்ணிய கதிர்களைக் கண்டே கருங்கடல் பொங்கியெழும். கதிரவனின் வெங்கதிரைக் கண்டு அக்கடல் பொங்குவ தில்லை. ஆதலின் மென்மதுர வாக்கையே இந்த மேதினி விரும்பி வரவேற்கும் ; வன்மொழியைக் கேட்டு மண்ணுலகம் இகழும் என்பர் முன்னேர். பொய் சிதைக்கும் பொன் போலும் மேனியை : என்பர் புலவர். பொய் சொன்ன வாய்க்குப் போசனம் இல்லே ' என்பது 5ம் நாட்டுப் பழமொழி. * நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம் ? என்று நீதி ஒதுவார் நம் தமிழ்ச் சான்ருேர். வாயின் இயல்பான தன்மை வாய்மையே. அதற்கு முரணுகப் பொய் மொழிவது எத்துணைப் பொருந்தாத செயல் என்பதை நினைந்து பார்க்கவேண்டும். வாய்ன்மக்கு இலக்கணம் வகுத்த வள்ளுவர் பெருமான், பிறிதோர்