பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

垒垒 வள்ளுவர் சொல்லமுதம் உயிர்க்குச் சிறிதும் துன்பம் விளையாத சொல்லே வாய்மை என்று கூறுவார். பொய்யும் சில வேள்ை களில் புரை திர்ந்த கன்மையைப் பிறர்க்கு விளக்கு மாயின் மெய்யெனப் போற்றலாகும் என்பது வள்ளு வர் உள்ளம். பொய்ம்மையும் வாய்மை விடத்த புாைதீர்ந்த தன்மை பயக்கும் எனின்" என்பது அவரது தெள்ளமுத மொழி. தீங்கு விளக்கும் வன்சொற்கள் நான்கனுள் புறங்கூறல் என்பதும் ஒன்று. இதனேப் புறங் கூருமை என்ற அதிகாரத்தால் வெறுத்துப் பேசு கிருர் தெய்வப் புலவர். பிறரைப்பற்றி அவர் இல்லாத விடத்து இகழ்ந்து பேசுவதே புறங்கூறல் ஆகும். அதனேயே குறளே என்றும் கூறுவர். பிறரைக் காணுதவழி இகழ்ந்துபேசி, அவரைக் கண்டவழி இனியவனப்போல நடித்து ஒருவன் உயிர் வாழ்த லினும், இறந்தொழிதல் சிறந்த பயனத் தரும் என் பர் செங்காப்போதார். ஒருவர் எதிரே கின்று இரக்கமற்ற சொற்களைப் பெருக்கமாகப் பேசினும் பேசுக , அவன் எதிரே இல்லாத வேளையில் அவனைப் பழித்தும் இழித்தும் பேசற்க என்பார். பிறரைப் பற்றிப் புறங்கூற முற்படுவார் அவரிடத்தே உள்ள குற்றங்களே ஆய்ந்து காணுமாறுபோலத் தம் மிடத்தே புறங்கூறலாகிய குற்றம் உள்ளது என்பதிை உணர வல்லராயின், அவரது உயிர்க்கு வரும் தீங்கும் உண்டோ ? என்று கேட்டார். தீய புறங்கூற்றின் மூங்கையராய்த் திகழ்வார்க்கு அறங்கூற வேண்டா : என்று ஆன்ருேர் அறிவுறுத்துவர்.