பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ சொல்லும் செயலும் 45. இயல்பாகவே கண்ணிமைத்தல் இல்லாத இமை யார் ஆகிய தேவர்கள், அங்கனம் இமைத்தல் செய்யா மைக்கு அறநெறிச்சார ஆசிரியர் முனைப்பாடியார் காரணம் கற்பிக்கிரு.ர். முன்னின்று ஒருவன் முகத்தினும் வாயினும் கன்னின்(று) உருகக் கலந்துரைத்துப்-பின்னின்று இழித்துரைக்கும் சான்ருேரை அஞ்சியே தேவர் விழித்திமையார் நின்ற நி:ை என்பது முனைப்பாடியாரின் திருப்பாடல். உலகில் சிலர், ஒருவன் முன்ல்ை நிற்கும்போது, கல்லும் கனிந்து உருகுமாறு முகத்தால் மலர்ந்து நோக்கி, வாயால் அன்புகனியப் பேசுவர்; அவன் சென்ற பின் னர் அவனை இகழ்ந்து பேசுவர்; இத்தகைய இழி செயல் உடையார் எத்துணை இழிந்தோர் ஆவர். அவர் களேச் சான்ருேர் என்று இகழ்ச்சிக் குறிப்புத் தோன்ற இயம்புகின்ருர், இங்கனம் புறங்கூறும் புல் லர்கள், தம்மையும் ஒருகால் இகழ்ந்து பேச முனைந்து விடுவரோ என்று எண்ணிய தேவர்கள் கண்ணிமை யாது, அவர்தம் செயலே நோக்குகின்றனர். இங்கனம் புலவர் தற்குறிப்பேற்றமாகப் புறங்கூறுவாரை இகழ்ந்து உரைக்கின்ருர், . வன்சொல்லக் குறிக்கவந்த வள்ளுவர் அடக்க முடைமையில் காவடக்கமும் ஒன்றென விளக்குகின் ருர். 'யா காவா ராயினும் நா காக்க ' என்று அன்பு கனிய நல்லுரை பகர்ந்தார். நாவைக் காவாத விடத்து, மக்கள், சொற்குற்றப்பட்டுச் சோகாப்பதே என்று இரங்கி இன்னுரை கூறினர். வன்சொல்லின் தீமையை விளக்கப்போந்த வள்ளுவர், 4-.rهه نه