பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் சொல்லமுதம் జఖిషాsబa க. திருக்குறள் தெள்ளமுதம் அமிழ்தம் என்பது அழகிய இனிய தமிழ்ச்சொல். அச்சொல்லின் இனிமைக்கு அதன் கண் உள்ள சிறப்பு ழகரமே தக்க சான்று. இயற்கை கலம் கெழுமிய இன்பத் தமிழ்மொழியே இனிமை வளம் கொழிப்பது. தமிழ் என்ற சொல்லுக்கே இனிமை என்ற பொருள் உண்டு. கற்பதற்கும் கேட்பதற்கும் களித்து உரையாடுதற்கும் எளிமையும் இனிமையும் வாய்ந்தது இம்மொழி. அமிழ்தம்போன்று ஆருயிர் தழைக்கச் செய்யும் ஆற்றல் உடையது. இக்காள் உலகில் வழங்கும் மொழிகள் மூவாயிரம். அவற்றுள் பழமையும் இலக்கிய வளமையும் பொருக் திய மொழிகள் இரண்டே அவை கந்தம் செந்தமிழும் அயலதாகிய சீனமுமே ஆகும். இவ் இரண்டனுள்ளும் இனிமை மிக்கது தமிழ்மொழியே. இதனலேயே பன் மொழி அறிந்த பாவலராகிய பாரதியார், - யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணுேம் ” என்று பாடினர். முன்னேப் பழமொழிக்கும் முன்னேப் பழமொழியாய்ப் பின்னேப் புதுமைக்கும் பேர்த்தும்