பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லும் செயலும் 47 கொடுமை நிறைந்த சொற்களாகவே உருவடைந்து வெளிப்படும் என்பதில் என்ன ஐயம்? ஆகவே, 'உள்ளம் கவர்ந்தெழுந்து ஓங்கு சினங்காத்துக் கொள்ளும் குணமே குணமென்க' என்பர் கன்னெறி ஆசிரியர். பயனில் சொல்லும் பிறர்க்குத் துன்பம் விளைக் கும் வன்சொல் ஆகும். இதனே நம் தெய்வப் புலவர், பயனில சொல்லாமை என்ற பகுதியால் கடியுமாறு வற்புறுத்துகிருர் பலரும் வெறுக்குமாறு பயனற்ற சொற்களைப் பேசுவான எல்லோரும் பெரிதும் இகழ் வர். பயனற்ற சொற்களைப் பலர் முன்னே பகர்வது, நண்பர்க்கு நயனற்ற செயலைச் செய்தலினும் தீதாகும். பன்முறையும் பயனில் சொற்களைப் பகர்வான மகன் என்றே மதித்தல் கூடாது. அவனப் பத்ர் என்று வெறுத்து ஒதுக்குதல் வேண்டும். ஆ த லி ன், மக்களே! சொல்லில் பயனுடைய சொல்லுக : பயனிலாச் சொல்லே ஒன்றேனும் சொல்லற் 5' என்று வள்ளுவர் வற்புறுத்துவார். . இங்ங்னம் நால்வகை வன்சொற்களைக் கடிந்து பேசிய கவிஞர்பெருமானுகிய திருவள்ளுவர், எவ ரிடத்தும் இன்பத்தைப் பெருக்கும் இன்சொல்லேயே பேசுக என்று வேண்டுவார். அதுவே துன்பத்தை மிகுவிக்கும் வறு ைமை யைத் தொலைப்பதாகும். இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் தருவதாகும். இன்சொல் கூறுவானின் பாவங்கள் குறைந்து தேயும். புண்ணியங்கள் வளர்ந்து பெருகும். இவ் வாறு பன்னலம் விளக்கும் இன்சொல்லே தனக்கும் இன்பம் தருவதை அறிந்த ஒருவன் என்ன கருதி