பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆஇ வள்ளுவர் சொல்லமுதம் வன்சொல்லே வழங்குகின்ருனே ? என்று வள்ளுவர் வன்சொல் கூறுவானே நினைந்து உள்ளம் குழை கின் ருர், கேட்பவர் உள்ளம் வேட்கை கொள்ளுமாறு இன்சொல் பேசுபவனே சிறந்த சொல்வல்லான் என் பது வள்ளுவர் கருத்து. சொல்லுக்கு இலக்கணம் இயம்பவந்த அப் புலவர், - " கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்.’ என்று அறுதியிட்டு உரைத்தருளுவார். இப் பாட லுக்குப் பரிமேலழகர் கானும் பொருள் அவர்தம் நுண்மாண் நுழைபுலத்தைப் புலப்படுத்துவதாகும். கட்பாய் ஏற்றுக்கொண்டாரை அக் கட்யினின்று விலகாதவண்ணம் மேலும் கயக்குமாறு செய்யும் நல் லாற்றல் அச் சொல்லுக்கு அமையவேண்டும். பகைமையால் வெறுப்பவரும் அப் பகைமை ஒழிந்து விரும்புமாறு செய்யும் பெருந்தகைமை அதன்பால் அமையவேண்டும். இங்ங்ணம் நட்பை உறுதிப்படுத்திப் பகைமையை ஒழிக்கவல்ல சொல்லே போற்றல் வாய்ந்த சொல் என்பது உரையாசிரியர் கொள்ளும் உயாகத கருததாகும். இத்தகைய நாகலம், எல்லோர்க்கும் எளிதில் அமைவதன்று. அரிதாகப் பெற்ற நாவன்மை உடையவனேப் பகைமையால் வெல்வது எவர்க்கும். இயலாது. கேட்பவர் உளம் கொள்ளுமாறு கருத் துக்களை நிரல்படக் கோத்துச் சொல்லும் வல்லம்ை உடையார்க்கு உலகம் விரைந்து ஏவல் கேட்கும். சொல்வன்மை இல்லாதவர் எத்துணை நூல்களைக்