பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லும் செயலும் 49 கற்ருலும் பயனில்லை. அவர் இணர் ஊழ்த்தும் காருத மலருக்கு ஒப்பாவர் குடத்துள் வைத்த விளக்கனையர் என்று கூறுவர். ஆகவே, ஒருவன் சொல்லக் கருதிய சொல், பயன் விளைப்பதாகவும் இனிமை தழைப்பதாகவும் இருத்தல் வேண்டும். மற்றவர் உள்ளத்தைப் பற்றி ஈர்க்கும் .ெ ப. ற் றிய தா. க இருக்கவேண்டும். அச் சொல்லை வெல்லும் சொல், வேருென்று இல்லாத வகையில் ஆய்ந்து சொல்லுதல் வேண்டும். அத் தகைய சொல்லே, தன்னையும் பிறரையும் செயற்படுத் தும் செம்மை வாய்ந்ததாகும். செய்வன திருந்தச் செய்” என்பது ஒளவை யாரின் அமுதமொழி. அறிவின் துணைகொண்டு அளவற்ற கருத்துக்களைச் சொல்லிவிடலாம். அவை களைச் செயன்முறையில் கொணர்பவனே சிறந்த அறிவாளன் ஆவான். உடலாற்றல் உளவாற்றல் களின் துணையின்றிச் செயலாற்றல் எவர்க்கும் இயலாது. பெரியார் துணேயாற்றலும் செயல் கிறை வேறப் பெருந்துணை செய்யும். சொல்லும் செயலும் ஒத்து அமைதல் வேண்டும் என்ற கருத்தாலேயே திருவள்ளுவர், சொல்வன்மை என்ற அதிகாரத்தை அடுத்துச் செயலேப்பற்றி விரி வாகப் பேசத் தொடங்குகிருர். வினைத்துாய்மை, வினைத்திட்பம், வினைசெயல்வகை என்ற மூன்று அதி காரங்களால் வினைத்திறத்தை விளக்குகின்ருர். முதற் கண் செய்யும் வினையின் செம்மையைப் பற்றிப் பேசுகின்ருர். செயற்கரிய செய்வார் பெரியர்,' என்பது தெய்வப்புலவர் திருவுள்ளம். அருமையும்