பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ வள்ளுவர் சொல்லமுதம் தூய்மையும் உடைய செயல்களே ஒருவரைப் பெரியவ ராக்கும் இயல்புடையன; பொருளும் அறமும் புகழும் பயப்பன; வினைகலம் வேண்டிய எல்லாம் தரும் என்பர். மக்கள் இயற்றும் செயல்களே இருவகையுள் அடக், கலாம். ஒன்று பொருள் கருதியதாகவும் மற்ருென்று புகழ் கருதியதாகவுமே அமையும். இரண்டும் செயல் துய்மையின் காரணமாக இம்மை மறுமை இன்பங் களேப் பயப்பனவே. ஆதலின் புகழும் அறமும் பய வாத செயல்களே என்றும் ஒழிதல் வேண்டும்; உலகில் பெருமை அடைய விழைவார்க்கு அவை தடையாக அமையும் என்பர். இறந்த மூப்பினராய இருமுது குரவரும் கற்புடை மனேவியும் குழவியும் பசியான் வருந்தும் எல்லேக்கண் தீயன பலவும் செய்தாயினும் புறந்தருக, என்னும் பிற அற நூல்கள். இக்கருத்து கம் தெய்வப்புலவர்க்கு உடன்பாடன்று. ஆதலின் வன்மையாக அதனே மறுத்துப் பேசுகிருர். தன்னைப் பெற்ற அன்னையின் பெரும்பசியைத் தணித்தற் கென்றேனும் அறிஞர் பழிக்கும் வினைகளைச் செய் யாது ஒழிக. என்று அறிவுறுத்துகிரு.ர். 'ஈன்ருள் பசிகாண்பா குயினும் செய்யற்க சான்ருேர் பழிக்கும் வினே.” என்பது அப் புலவரது உறுதிமொழி. தீய வினைகளேச் செய்து தீராத பழியுடன் பொரு ளைத் தேடிச் செல்வரென வாழ்வதில் என்ன சிறப் புளது; பழி சாராத பண்புடையார் அனுபவிக்கும் வறுமை, அச் செல்வ வாழ்வினும் மிகப் பெருமை. யுடையதாகும். ஒருவன் தீய வினைகளைச் செய்து