பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லும் செயலும் * 5]. தேடிய பொருள் அவன்பால் நிலைத்திருப்பதன்று. அது பசிய மட்டாண்டத்துள் நீரைப்பெய்து பாது காத்தற்கு ஒப்பாகும் என்பர். பிறர் வருந்துமாறு நீட்டிய பெருஞ்செல்வம் இம்மையிலேயே அவ் ஈட்டி னேர் இரங்கி வருந்துமாறு அகலும் அமுக் கொண்ட எல்லாம் அழப்போம் என்பர் நம் தெய்வப்புலவர். புகழ் பயக்கும் தூய வினைகளைப் பொருந்தவும் திருந்தவும் ஆற்றுதற்கு ஏற்ற மனத்திட்பம்வேண்டும். வினைசெய்ய நினைந்தவர் துணிவுடையராயின், எண் ணிய எண்ணியாங்கு எய்துவர், என்பார். ஒருவன் செய்யும் செயலே முன்னெல்லாம் மறைத்து முடிவின் கண் பிறர்க்குப் புலப்படுமாறு செய்வதே வினவெற். றிக்கு உற்ற காரணமாகும். உருவத்தால் சிறியராய சிலர் உறுதியான உள்ளத்தால் சிறந்து விளங்குவர். அன்னரை வடிவின் சிறுமை நோக்கி இகழ்தல் தகாது. அவர்கள் உருளும் பெருந்தேர்க்கு அச்சாணி ஒப்பர். ஆலம் வித்து மீன்முட்டையினும் மிகச் சிறியதே. எனினும் அதனின்று முளேத்துக் கிளேத் துச் செழித்த முழுமரத்தின் பெருநிழல் முடிமன்னர் நால்வகைப் படையுடன் தங்குதற்குத் தகுவதாகும். ஆதலின், சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர், என்பர் அதிவீரராமர். நுண்ணிய கருமமும் எண்ணித் துணிதல்வேண் டும். துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கைத் தரும். தெளிந்து செய்யத்துணிந்த வினேக்கண் இறுதி வரை தளர்தலின்றிக் காலத்தைத் தாழ்க்காது கடிது முடித்தல் வேண்டும். உடல் உழைப்பால் மிக்க துன்பம் உறுவதாயினும் அதுநோக்கித் தளர்தல்