பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 வள்ளுவர் சொல்லமுதம் தகாது. முடிவில் அடையும் இன்பத்தையே குறிக் கோளாக எண்ணி உறுதியுடன் வினையாற்றுதல் வேண்டும். அத்தகைய செயல்உறுதி இல்லாத சிறி யரைப் பெரியர் மதியார். சில செயல்களைக் காலம் நீட்டித்தே செய்தல் வேண்டும். சில வினைகளை விரைந்து முடித்தல்வேண் டும். இவ் இருவகை வினைகளையும் வலியாலும் காலத் தாலும் அறிந்து ஆற்றுதல் நலம். பொருள், கருவி, காலம், வினே, இடம் ஆகிய ஐந்தனையும் தெளிவுற ஆராய்ந்து செயலாற்றவேண்டும். வினே முடிதற்கு வேண்டும் முயற்சி, அதற்கு வரும் இடையூறு, அது நீங்கிச் செயல் முடிந்தால் தான் எய்தும் பயன் இவற்றை எல்லாம் சீர்தூக்கிச் செயல்புரிதல்வேண்டும். கல் ஒன்றை எறிந்து காய்கள் இரண்டைப் பெறு தலும் உண்டன்ருே சிலர் தமது செயல் திறமையின் பயனகச் செய்யும் ஒரு செயலாலேயே மற்ருெரு செய லும் தானே முடியப்பெறுவர். கம்புக்குக் களைவெட்ட அழைத்துச்சென்ற காரிகையைத் தம்பிக்குப் பெண் டாகக்கொண்டவன் எத்துணைச் செயல் திறனுடைய வன்! ஆடு மேய்க்கச்சென்றவன் அண்ணனுக்குப் பெண்ணும் பார்த்துவந்தால், அவன் பெருஞ் செயல் திறன் படைத்தவன் என்று பேசுவர் அன்ருே 'வினையால் வினையாக்கிக் கோடல் நனகவுன் யானையால் யானேயாத் தற்று.” என்பது வள்ளுவர் சொல்லமுதம் ஆகும். மதங் கொண்ட யானையினைச் செலுத்தி அன்னது பிறிது மோர் யானையைப் பிணித்தல்போல்வதாகும் அச் செயல் என்பர். மதங்கொண்ட யானையை அத்தகைய