பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. கொடைநலமும் படைவலமும் ஈகையும் வீரமும் தமிழரின் இணையற்ற பண்புகள் ஆகும். பழந்தமிழ்நாட்டு மன்னர் பலரும் கொடை கலத்திலும் படை வலத்தினும் சிறந்து விளங்கினர். இவ் உண்மையைச் சங்க இலக்கியங்கள் பல பாடல் களில் இனிது விளக்கும். பண்டைப் புலவரெல்லாம் மன்னர் கொடைநலத்தையும் படை வீரத்தையுமே கொண்டாடித் தண்டமிழ்ப்பாக்கள் பாடினர். திரு வள்ளுவரும் தம் நூலுள் இத்திறங்களே நயம்பட உரைக்கிருர், தமிழ்நாட்டுக் கொடையின் பெருமையைக் குறிக் கத் திருவள்ளுவர் ஈகை, ஒப்புரவறிதல், அருள் முத லாய பல அதிகாரங்களே வகுத்துள்ளார். இல்லறத் தார் இனிது போற்றவேண்டிய அறம் ஈகையே. இவ் ஈகையின் இலக்கணமாக வள்ளுவர், வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை' என்று வரையறுத்துக் கூறி ர்ை. வறியர் அல்லாதவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்ப தெல்லாம் குறியெதிர்ப்பைக் கைம்மாறு கருதலே ஆகும். அளவு குறித்து ஒரு பொருளை மற்றவர்க்குக் கொடுத்து அவ்வளவே மீண்டும் அவர்பால் பெறுவது குறியெதிர்ப்பை ஆகும்; இங்ங்னம் பயனே எதிர்பார்த் துக் கொடுக்கும் கொடை, ஈகையின்பாற் படாது என்பர். ஈகை அறத்தின் சிறப்பினை விளக்கப் புகுந்த பொய்யில் புலவராகிய வள்ளுவர், - " நல்லாறு எனினும் கொளல்திது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று'